நீராகாரம் போனது எப்படி?
நம் தாத்தா, பாட்டி காலத்தில் காலையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கும் பழக்கமே இல்லை. அப்போது காலையில் குடிப்பது நீராகாரம்தான்.
நீராகாரம் என்றால் என்ன?
சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்பும், தண்ணீரும் கலந்து குடிப்பார்கள். மண் பானையில் ஊறிய இந்த நீராகாரம் உடலுக்குக் குளிர்ச்சியையும், வயலில் வேலை செய்யத் தேவையான சக்தியையும் கொடுக்கும். அப்போது காபி, டீ எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே குடித்த பானங்கள்.
கதையை மாற்றிய இலவசம்
டீ, காபி தோட்ட முதலாளிகள் ஒரு புது யுக்தியைப் பயன்படுத்தினார்கள். அதுதான் இலவசம்.
மதியம் வீடு வீடாகச் சென்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து, மாலை 4 மணிக்கு பெரிய பாத்திரத்தில் இலவசமாக டீ அல்லது காபி கொண்டு வந்தார்கள். வெயிலோ, மழையோ, மூன்று மாதங்களுக்கு இந்த இலவசம் தொடர்ந்து நடந்தது.
பழக்கம் மாறியது
இலவசம் கொடுத்த பிறகு, "மாதிரிப் பொடி (sample)" பாக்கெட்டுகள் வந்தன. பிறகு மலிவான விலையில் டீ தூள், காபி பொடி பாக்கெட்டுகளில் விற்கப்பட்டன.
இலவசத்துக்குப் பழகிய மக்கள், டீ-காபி சுவைக்கு அடிமையாகிவிட்டார்கள். மெதுவாக நீராகாரத்தைக் குடிப்பதை நிறுத்தினார்கள். டீ-காபி மட்டும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது.
இன்றைய நிலை
இன்று இந்தியாவில் விளையும் நல்ல தரமான தேயிலை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நமக்குக் கிடைப்பதோ, அவர்கள் தூக்கி எறிந்த டீ தூள் மட்டும்தான்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக